நிழலில்லாத நாள் என்று அழைக்கப்படும் "ஜீரோ ஷடோ டே'
நிழலில்லாத நாள் என்று அழைக்கப்படும் "ஜீரோ ஷடோ டே' குறித்து சென்னை பிர்லா கோளரங்கத்தில் பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி மாணவர்கள் ஆர்வத்துடன் ஆய்வில் ஈடுபட்டனர்.
சூரியனை பூமி நாள்தோறும் சுற்றி வந்தாலும் அனைத்து நாள்களும் சூரியன் நமது தலைக்கு மேல் செங்குத்தாக வருவதில்லை. அவ்வாறு தலைக்கு மேல் சூரியன் செங்குத்தாக வரும் நிகழ்வுதான் நிழலில்லாத நாள் "ஜீரோ ஷடோ டே' என்று அழைக்கப்படுகிறது.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நேரத்தை ஆய்வு செய்தனர்.
ஆண்டுக்கு இரண்டு நாள்கள் மட்டுமே சூரியன் இவ்வாறு செங்குத்தாக வருகிறது. இந்த ஆண்டு சென்னையில் புதன்கிழமை (ஏப்ரல் 24) நிழலில்லா நாள் வந்தது.
இதுகுறித்து சென்னை பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் (பொ) சௌந்திரராஜ பெருமாள் கூறியது
"சூரியனை பூமி சுற்றி வரும்போது, அதன் சுழல் அச்சு சற்று சாய்ந்து இருக்கும். இதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 22-ஆம் தேதி சூரியன் மகர ரேகைக்கு நேராகவும், தொடர்ந்து, மார்ச் 21-ஆம் தேதி சரியாக நிலநடுக்கோட்டுக்கு நேராகவும் காணப்படும். இதைத் தொடர்ந்து, மெல்ல நகர்ந்து ஏப். 24 (புதன்கிழமை) 13 டிகிரி நேராக சூரியன் வரும். அதுதான் சென்னைக்கான நிழலில்லாத நாளாக கணிக்கப்படுகிறது. அப்போது, சூரியன் செங்குத்தாக, அதாவது தலை உச்சிக்கு நேராக இருந்ததால், உடலின் நிழல் பக்கவாட்டில் விழாமல் பாதத்துக்கு அடியில் விழுந்தது. அடுத்த நிழலில்லா நாள் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நிகழும் என்றார்."
இதையொட்டி, சென்னையில் புதன்கிழமை நண்பகல் 12.07 மணிக்கும், அதன் நேர்கோட்டில் உள்ள கர்நாடக மாநிலம் பெங்களூரில் நண்பகல் 12.17-க்கும், மங்களூரில் நண்பகல் 12.28-க்கும் என 10 நிமிட இடைவெளியில் நிழலில்லா நாள் நிகழ்ந்தது.
நிழலில்லாத நாள் என்று அழைக்கப்படும் "ஜீரோ ஷடோ டே' 
 
        Reviewed by Rajarajan
        on 
        
26.4.19
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
26.4.19
 
        Rating: 


கருத்துகள் இல்லை