ஆசிரியர்களுக்கு எதிரான புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்?
ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை பதிவு செய்ய, கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவிக்கும்படி, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள, மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர், ரங்கநாதன் என்பவரை, செல்வபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு இடமாற்றம் செய்து, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ரங்கநாதன் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:இரண்டு பள்ளிகளுக்கும் இடையே, 2 கி.மீ., துாரம் தான் உள்ளது.
மாநகராட்சி எல்லைக்குள் வருகிறது. நிர்வாக காரணங்களுக்காக, இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இடமாற்றம்விசாரணையின் போது, மற்றொரு தலைமை ஆசிரியையின் இடமாறுதல் கோரிக்கையை பரிசீலித்து, ரங்கநாதனை இடமாற்றம் செய்ததாக கூறப்பட்டது.எனவே, நிர்வாக காரணங்களுக்காக, ரங்கநாதனை இடமாற்றம் செய்ததாக கூறியது தவறு. இடமாறுதலால், மனுதாரரின் சஜக வாழ்க்கையிலும், பணி நிபந்தனைகளிலும் பாதிப்பு இல்லை என்பதால், குறுக்கிட வேண்டியதில்லை. மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள், அவர்களின் பாலியல் தொந்தரவுகள், &'டியூஷன்&' வகுப்பு குறித்த புகார்களை பதிவு செய்ய, கட்டணமில்லா தொலைபேசி எண்களை, எட்டு வாரங்களில், பள்ளி கல்வித் துறை அறிவிக்க வேண்டும். கட்டணமில்லா தொலைபேசி எண்கள், அதிகாரிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய தகவல்களை, அனைத்து பள்ளிகளிலும், அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும். பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள், எளிதில் அணுகும் வகையிலான இடத்தில், கொட்டை எழுத்தில் வெளியிட வேண்டும்.தொலைபேசி வழியாக வரும் புகார்களை, உடனடியாக கவனித்து, ௨௪ மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாக்கல்ஆசிரியர்கள், தனியாக டியூஷன் மற்றும் 'டுட்டோரியல்' வகுப்புகளை நடத்தவோ, வேறு எந்த தொழிலிலும் ஈடுபடவோ கூடாது என, பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்ப வேண்டும்.மனுதாரருக்கும், ஆர்.எஸ்.புரம் பள்ளி தலைமை ஆசிரியைக்கும் இடையே, தனிப்பட்ட பகை காரணமாக, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால், இரண்டு தலைமை ஆசிரியர்களும், அவரவர் பள்ளி வளாகத்தில், ௫௦ மரக்கன்றுகளை நட வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
ஆசிரியர்களுக்கு எதிரான புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்?
Reviewed by Rajarajan
on
10.4.19
Rating:
கருத்துகள் இல்லை