கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தர வரிசை பட்டியல்
புதுடில்லி: உயர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தர வரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இதில், இன்ஜினியரிங் பிரிவில், சென்னை, ஐ.ஐ.டி., முதலிடத்தை பிடித்துள்ளது.பல்கலை, இன்ஜினியரிங் கல்லுாரி, மேலாண்மை கல்லுாரி, சட்டம் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளில், ஒவ்வொரு ஆண்டும், சிறந்த உயர்கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து, தர வரிசை பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிடும்.இந்த ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், நேற்று வெளியிட்டார். இந்த பட்டியலில், சிறந்த இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களில், சென்னை, ஐ.ஐ.டி., எனப்படும், உயர் கல்வி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் முதலிடம் பெற்று உள்ளது.இரண்டாமிடத்தில், டில்லி, ஐ.ஐ.டி.,யும், அதற்கு அடுத்தடுத்த இடங்களை, மும்பை, கரக்பூர், கான்பூர், ரூர்க்கி, கவுஹாத்தி மற்றும் ஐதராபாத், ஐ.ஐ.டி.,கள் பிடித்துள்ளன.ஒன்பதாவது இடத்தில் சென்னை அண்ணா பல்கலையும், 10ம் இடத்தில் திருச்சியில் உள்ள, என்.ஐ.டி., எனப்படும், தேசிய தொழில்நுட்ப நிறுவனமும் உள்ளன.சிறந்த பல்கலைகள் பட்டியலில், சென்னை, அண்ணா பல்கலை, ஏழாவது இடத்தை பிடித்து உள்ளது. சிறந்த கலைக் கல்லுாரிகளுக்கான பட்டியலில், சென்னை, மாநில கல்லுாரி மூன்றாமிடத்தையும், லயோலா கல்லுாரி ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளன.
கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தர வரிசை பட்டியல்
Reviewed by Rajarajan
on
9.4.19
Rating:
கருத்துகள் இல்லை