Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இரயில்வே துறையில் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல் படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு



அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள், ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பிரபாகர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தெற்கு ரயில்வேக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. உயர் நீதிமன்ற தடையை மீறி ரயில் நிலைய வளாகங்களில் ஃபிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அனைத்து ரயில் நிலையங்களிலும் ஃபிளக்ஸ்போர்டு, பேனர் மற்றும் சுவர்விளம்பரங்களுக்கு இடைக்காலத்தடைவிதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் நேரில் ஆஜராகநீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.காந்தி வாதிட்டார். அப்போது தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மிஸ்ரா நேரில் ஆஜரானார்.

அவர் கூறும்போது, “ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தெற்கு ரயில்வேயில் 90 ஆயிரம் ஊழியர்களில் 4,500 பேர் தினமும் அறிவிப்பு கொடுக்காமல் பணிக்கு வராமல் உள்ளனர். சென்னை உள்ளிட்ட 19 ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு 24 மணி நேரமும் மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் குறித்து 182 எண் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்பது தொடர்பாக ரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்ய வேண்டும். ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான ஃபிளக்ஸ் போர்டு, பேனர்களைரயில்வே டிஜிபி, ஐஜி ஆகியோரின்பாதுகாப்புடன் உடனடியாக அகற்றவேண்டும். ரயில் நிலைய சுவர்களில்விளம்பரங்களை அகற்றவேண்டும்.

ரயில்வே சார்பில் வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீரின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையை போன்று அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ரயில் நிலையங்களில் உள்ள தனியார் மற்றும் சங்கங்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்கள், வாடகை தராமல், உரிமம் பெறாமல் ரயில்வே இடங்களில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக ஏப்.

24-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

முன்னதாக எஸ்ஆர்எம்யூ உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கங்களையும், ரயில்வே டிஜிபி, ஐஜி ஆகியோரையும் நீதிபதிகள் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர்.

இரயில்வே துறையில் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல் படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு இரயில்வே துறையில் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல் படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு Reviewed by Rajarajan on 16.4.19 Rating: 5

கருத்துகள் இல்லை