தூத்துக்குடி துறைமுகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிப்பு
தூத்துக்குடி துறைமுகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களும், எலக்ட்ரீசியன், மெக்கானிக் (டீசல்), மோட்டார் வெகிகிள், டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்), பி.ஏ.எஸ்.எஸ்.ஏ., பிட்டர், வெல்டர் உள்ளிட்ட பிரிவில் ஐ.டி.ஐ. பயிற்சிப் பணிகளும் உள்ளன. மொத்தம் 72 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரி பயிற்சி பணிகளுக்கு, பணியிடங்கள் உள்ள பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப்பின், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரீசியன், டீசல் மெக்கானிக், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் பட்டதாரிகள் அல்லாத பிரிவு பயிற்சிப் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை Chief Mechanical Engineer. V.O.Chidambara nar Port Trust, Tuticorin 628004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் ஏப்ரல் 15-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். இது பற்றிய விவரங்களை http://www.vocport.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
தூத்துக்குடி துறைமுகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
1.4.19
Rating:

கருத்துகள் இல்லை