முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகும்
தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சமீபத்தில் 1,574 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டன. அப்படியும் மாநிலம்முழுவதும் அரசுப்பள்ளிகளில் ஏறத்தாழ 2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதனால் வரும் 2019-20ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் காலி பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் டிஆர்பி மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் ஏறத்தாழ 2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதனால் வரும்2019-20ம் கல்வி ஆண்டில் கற்பித்தலில் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிய வந்தது.இதையடுத்து அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, வேலூர்ஆசிரியர் காலி பணியிடங்கள் மாவட்டத்தில் 143 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெறிய வந்துள்ளது. காலிபணியிட விவரங்கள் பெறப்பட்டதும், அதில் 50சதவீதம் பணியிடங்கள் பதவி உயர்வு அடி.ப்படையில் நிரப்பப்படும். மீதியுள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகும்
Reviewed by Rajarajan
on
25.4.19
Rating:
கருத்துகள் இல்லை