இனி வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல வேண்டியதில்லை
வாக்களிக்க சொந்த ஊருக்கு போகவேண்டும் என்கிற அவசியமில்லை. இனி நாம் எங்கிருக்கிறோமோ அதற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியும்.
பலருக்கும் சொந்த ஊரில் தான் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும். ஆகையால், வெளியூரில் இருப்பவர்கள் வாக்களிக்க செல்ல முடியாத சூழல் உருவாகும்.
அத்தோடு போக்குவரத்து, பயணச் செலவு என காலமும், பண விரயமும் ஏற்படுவதால் பெரும்பாலானோர் வாக்களிக்க ஊருக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.
இனி அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. கவலைப்படத் தேவையுமில்லை.
அதற்காகவே www.nvsp.in national voters service portal என்கிற வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் உங்களுக்கு உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே வாக்களிக்க அனுமதிக்கப்படுவீர்கள்.
மேலும் கள்ள ஓட்டுக்களும் தடுக்கப்படும்.
இதற்குத் தேவை உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் (Epic No), திருமணமாகி வந்திருந்தால் உங்கள் மனைவியின் வாக்காளர் அட்டை எண், உங்களின் மார்பளவு புகைப்படம் (jpeg or jpg format only), தற்போதைய முகவரி சான்று (jpeg or jpg), மற்றும் உங்களின் பிறந்த தேதிக்கான சான்று (ஆதார் எண், etc) படிவத்தை சமர்ப்பித்த பின் உங்களது கைப்பேசி எண்ணிற்கு Ref No. அனுப்பப்படும்.
மேலும், படிவம் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நாம் இருக்கும் இடத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதிக்கப்படும்.
இனி வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல வேண்டியதில்லை
Reviewed by Rajarajan
on
15.4.19
Rating:
கருத்துகள் இல்லை