1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்ச்சி குறித்து ஆலோசித்து நடவடிக்கை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இதனிடையே தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தொடரில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு தேர்வு ரத்து செய்து அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்ச்சி குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்ச்சி குறித்து ஆலோசித்து நடவடிக்கை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Reviewed by Rajarajan
on
21.3.20
Rating:
கருத்துகள் இல்லை