20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போருக்கு இறுதி வாய்ப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
பொறியியல் படிப்புகளில் தேர்ச்சி பெறாமல் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போருக்கு அண்ணா பல்கலைக்கழகம் இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது.
பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த தொடர் கோரிக்கையை ஏற்று, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து இதுவரை தேர்ச்சி பெறாமல் இருக்கும் நபர்கள் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் தேர்வுகளின் போது, தேர்வு எழுத இறுதி வாய்ப்பு வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மார்ச் 13 ஆம் தேதி முதல் 23-ம் தேதி வரை சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போருக்கு இறுதி வாய்ப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
15.3.20
Rating:
Reviewed by Rajarajan
on
15.3.20
Rating:


கருத்துகள் இல்லை