Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

What's app வைரல் மெசேஜ் டீ குடித்தால் கொரோனா வைரஸ் குணமாக்குமா ? வதந்தியா?

சாதாரண காய்ச்சல் டீ அருந்தினால் குணமாகாது என்பது நாம் அறிந்த உண்மை.  அப்படி இருக்கையில் கொரோனா வைரஸ் தொற்றை டீ பருகினால் குணமாக்கும் என்பது எவ்வாறு சாத்தியம். இது , டீ குடித்தால்  குணமாகாது. அப்படி ஏதும் நிரூபிக்கப்படவும் இல்லை.

டீ ஒர் மூளையை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் பானம். இதில் உள்ள சில வேதிப் பொருட்கள் 
மனித உடலை சுறுசுறுப்பாக இயங்கும் வைக்கும். 

முதன்முதலில் கொரோனா பற்றி எச்சரிக்கை செய்த சீன மருத்துவர் Li Wenliang தன்னுடைய கடைசி குறிப்பில் கொரோனாவை குணப்படுத்த தேவையான Methylxanthine, Theobromine and Theophylline ஆகியவை தேயிலையில் இருப்பதாகவும், தற்போது சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்ததற்கும் அவர்கள் டீ குடித்ததே காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் ஃபஸ்ட் போஸ்ட், அளித்துள்ள தகவலின் படி அது உண்மையல்ல என்று ஆய்வாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். டீயானது சாதாரண காய்ச்சல், சளியை குணப்படுத்துமா என்பது கூட நிரூபிக்கப்படாத நிலையில் கொரோனாவை குணப்படுத்தும் என்று கூறுவது வேடிக்கை என்கின்றனர். தொண்டை வலி, நெஞ்சு சளி போன்றவற்றிற்கு இதமான உணர்வுக்காக தேனீர் அருந்துவதும், பரிந்துரைப்பதும் வழக்கம்.

சில நேரங்களில் தொடர் இருமல் குறையவும் இது உதவலாம். மேலும் தேயிலையில் Theophylline உள்ளதால் டீ குடிப்பது மூச்சு விடுவதன் சிரமத்தை குறைக்கலாம். Theobromine ஆஸ்துமா, இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். ஆனால் இது கொரோனாவை குணமாக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை
என்கின்றனர் மருத்துவர்கள்.
What's app வைரல் மெசேஜ் டீ குடித்தால் கொரோனா வைரஸ் குணமாக்குமா ? வதந்தியா? What's app வைரல் மெசேஜ் டீ குடித்தால் கொரோனா வைரஸ் குணமாக்குமா ? வதந்தியா?  Reviewed by Rajarajan on 27.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை