Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி உரை


#CoronaVirus #PMModi 



* உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது

* உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா

* தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை

* கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது

* ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது

* திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது- மோடி

* கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக
கண்காணித்து வருகிறது

* சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை
தடுத்துள்ளது.

* மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை
கூட்டம் நடத்தியுள்ளார்.

* கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை
   கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது.

* நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும்

* மார்ச் 22 ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு என்பதை தாண்டி மேலும் ஒரு
விஷயத்தையும் கேட்கிறேன்.

* தங்களை பற்றி கவலை கொள்ளாமல் மக்களுக்காக உழைக்கும்
   மருத்துவர்கள். செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், உணவு விநியோகம்
செய்வோர் நமக்காக பணியாற்றுவோரை உற்சாகப்படுத்த வேண்டும்

* மக்களுக்காக மக்களால் ஒரு ஊரடங்கை கேட்கிறேன்- மோடி

* மார்ச் 22 ஞாயிறன்று காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை
வெளியே வரவேண்டாம்

* தினமும் 10 பேரையாவது அழைத்து வெளியே செல்ல வேண்டாம் என
கேட்டுக்கொள்ள வேண்டும்-

* வரும் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு அனைவரும் கைதட்டியும்,
   கரகோஷம் எழுப்பியும்...


* உங்களுக்கு ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால்,
அவசரமில்லை என்றால் தள்ளிப்போடுங்கள்

* "பொதுமக்கள் பதற்றம் அடைந்து பொருட்கள் வாங்கி பதுக்க வேண்டாம்"

*"எப்போதும் போல் உங்கள் தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்குங்கள்"

* நமக்காக பணியாற்றுவோரை உற்சாகப்படுத்த வேண்டும்
முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்

* வீட்டில் இருந்தே பணி செய்யும் முறைக்கு மாற வேண்டும்-

* இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நல்லது

* தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்
   என்று  மோடி தெரிவித்துள்ளார்.



கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி உரை கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி உரை Reviewed by Rajarajan on 19.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை