Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மும்பையில் 10 வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர் கொரோனா வைரஸ் பதிப்பு, கண்காணித்த ஆசிரியர் மற்றும் பிற மாணவர்களின் நிலைகுறித்து அச்சம்

CREDIT TO MUMBAIMIRROR
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கஸ்தூரிபாய் மருத்துவமனையில் மார்ச் 21 ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது ரத்த மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே அவரது தந்தை  வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் மாணவர் தெற்கு மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதியதாகவும் அதில் ஒன்பது பள்ளிகளைச் சேர்ந்த  353 மாணவர்கள் மற்றும் ஒன்பது ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள மாணவர் அமர்ந்திருந்த தேர்வறையில் கண்காணிப்பாளராக செயல்பட்ட ஆசிரியர் மற்றும் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் 25 மாணவர்களுடைய முகவரியை மாநில சுகாதாரத்துறை பெற்று கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மும்பையில் 10 வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர் கொரோனா வைரஸ் பதிப்பு, கண்காணித்த ஆசிரியர் மற்றும் பிற மாணவர்களின் நிலைகுறித்து அச்சம் மும்பையில் 10 வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர் கொரோனா வைரஸ் பதிப்பு, கண்காணித்த ஆசிரியர் மற்றும் பிற மாணவர்களின் நிலைகுறித்து அச்சம் Reviewed by Rajarajan on 26.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை