பொருட்களின் மேற்பரப்பில் பல மணி நேரம் வாழும் கொரோனா NIH ஆய்வு எச்சரிக்கை..!
CREDIT TO NIH
அமெரிக்காவின் National Institues of Health-இன் ஒரு பகுதியான ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்க்கான பிரிவு நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, காற்றில் கலக்கும் கொரோனா நீர்த்திவலைகள் (droplets) மூன்று மணி நேரமும், பொருட்களின் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா ஒரு நாளுக்கும் மேலாக வாழும் திறனுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் வெளிவந்துள்ள தகவலின்படி, ப்ளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் பரப்பின் மீது ஒரு நாளுக்கு மேலாகவும், கொரோனா வைரஸ் உயிருள்ளதாக இருக்கிறது என்றும், பித்தளை உலோகப் பொருட்களின் மீது 4 மணி நேரம் வரை வாழ்கிறது எனவும் தெரியவந்துள்ளது.
பொருட்களின் மேற்பரப்பில் பல மணி நேரம் வாழும் கொரோனா NIH ஆய்வு எச்சரிக்கை..!
Reviewed by Rajarajan
on
21.3.20
Rating:
கருத்துகள் இல்லை