கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 36 பேரில், அதிக நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார்?
தமிழக சுகாதாரத்துறையின் புள்ளி விபரங்களின்படி, துபாயிலிருந்து வேலூர் திரும்பிய 26 வயது இளைஞருடன் தொடர்பில் இருந்த 188 பேரை தனிமைப்பட்டுத்தப்பட்டதே மிகப்பெரிய எண்ணிக்கையாக இதுவரை இருக்கிறது. அடுத்தபடியாக பிரிட்டன் நாட்டிலிருந்து கோவை திரும்பிய, திருப்பூரைச் சேர்ந்த 48 வயது நபருடன் தொடர்பில் இருந்த 185 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி வழியாக சேலம் வந்த இந்தோனேசியர்கள் 4 பேருடன் தொடர்பில் இருந்த 172 பேர் அடையாளம் காணப்பட்டு கண்காணிப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டுப் பயண பின்னணி இன்றி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த 54 வயதான நபருடன் தொடர்பில் இருந்த 170 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியிலிருந்து ரயில் மார்க்கமாக சென்னை திரும்பிய 25 வயது இளைஞருடன் தொடர்புடைய 163 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 36 பேரில் 11 பேருக்கு, வைரஸால் பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலமே தொற்றியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 87,475 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதில் வெளிநாடுகளிலிருந்து வந்த பின்னணியுடன் அதிதீவிர கண்காணிப்புக்கு உள்ளனவர்கள் 15,629 பேர் என்கிறது சுகாதாரத்துறை. இதில், 5000 பேருடன் சென்னை டாப் இடத்தில் இருக்கிறது. 1011 பேருடன் கன்னியாகுமரி இரண்டாவது இடத்திலும், 897 பேருடன் தஞ்சை மூன்றாவவது இடத்திலும், 726 பேருடன் கோவை நான்காவது இடத்திலும் உள்ளன.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 36 பேரில், அதிக நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார்?
Reviewed by Rajarajan
on
29.3.20
Rating:
Reviewed by Rajarajan
on
29.3.20
Rating:


கருத்துகள் இல்லை