Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை( National Testing Agency- NTA )

National Testing Agency- NTA 

தேசிய தேர்வு முகமையின் சார்பில் (National Testing Agency- NTA) நடப்பு ஆண்டிற்கான நெட் தேர்வு, ஜேஇஇ, ஆயுஷ் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை அறிவித்திருந்தது. இதற்கு மார்ச் இறுதிக்குள்ளும், சில தேர்வுகளுக்கு ஏப்ரல் மாதத்திலும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் NTA தேர்வுகளின் விண்ணப்பப்பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



அதன்படி, யுஜசி நெட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு மே 16 ஆம் தேதி வரையிலும், UGC CSIR NET 2020 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 15 வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வேளாண்மை படிப்புக்கான ICAR 2020 தேர்வு, இக்னோ பி.ஹெச்டி நுழைவுத்தேர்வு, விடுதி மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கான JEE 2020 தேர்வு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ம் தேதி வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுநிலை ஆயுஷ் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்க மே 31 ஆம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.



National Testing Agency- NTA 


UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை( National Testing Agency- NTA ) UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை( National Testing Agency- NTA ) Reviewed by Rajarajan on 31.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை