Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

உலகம் முழுவதும் மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டம் மிக மோசமாக இருக்கிறது என முன்பே கணித்து சொன்ன அதிசய சிறுவன்

ஊர் உலகமெங்கும் இவர் பேச்சு தான்..
14 வயதான
💖 அபிக்கியா ஆனந்த்💖 என்ற இந்தியச் சிறுவன் அவருடைய யூடியூப்
சேனலில் 22 ஆகஸ்ட் 2019ல் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுச் சொன்னார்.  அதாவது  பூவுலகம் நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை ஒரு கடினமான சூழ்நிலைக்குத் தள்ளப்படும் என்று சொன்னார்.

இந்த 6 மாத காலத்தில் உலகளாவிய வைரஸ் ஒன்று பரவி உலகையே பீதியில்
ஆழ்த்தும் என்று சொன்னார்.  உச்ச கட்டமாக 31 மார்ச் 2020 அன்று உலகமே பீதியில் உறைந்து என்ன செய்வது என்று
தெரியாமல் பயந்து நடுங்குமாம்.

ஆனால் ஒரு சிறு நிம்மதி.  29 மே மாதம்
பூமி சுழற்சியில் இந்தக் காலக்கட்டத்தை
விட்டு நகர்ந்து விடும்.  அதிலிருந்து இந்த
வைரசின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும்.
அந்த வைரசின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

ஆனந்த் ஒரு அதிசயக் குழந்தை !  அவரைப் பற்றிப் பல பத்திரிகைகள் எழுதி உள்ளன.  2013ம் வருடம் இவருடைய
திறமையை "இந்தியன் டயம்ஸ்" என்ற பத்திரிக்கை இவர் தான் ஒரு பெரிய வானசாஸ்திர நிபுணர் என்றும் சொல்வதெல்லாம் உண்மை என்றும் சொல்வதை வான சாஸ்திரம் தெரிந்தவர்களை வைத்துச் சோதித்துக் கூடப் பார்த்ததாம்.  பலரும் இவருடைய திறமையைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள், இவர் தன்னுடைய திறமையால் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின்
விலையின் ஏற்ற, இறக்கங்கள் எதிர்
காலத்தில் எப்படி இருக்கும் என்று கூட
முன்கூட்டியே சொல்லும் திறமை உள்ளவராம் !

கோரோனா வைரசைப் பொறுத்தவரை
இது உலகளாவிய யுத்தம்.  மனித குலத்துக்கும் வைரசுக்கும் உள்ள பெரும் போர்.  அதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் இதில் எந்த எந்த அரசாங்கங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்பது நம்முடைய யூகத்துக்கு அப்பாற்பட்டது.  ஆனால் ஒன்று,  இது ஒரு மிகப் பெரிய போர் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.  

31 மர்ச்சுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?  இருக்கிறது, அன்றுதான் செவ்வாய், சனி, வியாழன், வெள்ளி, சந்திரன், ராகு ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. ராகு அன்று சந்திரனின் வடக்கு முனையாக இருக்கிறது.

வான சாஸ்திரத்தில்  இது ஒரு அரிய நிகழ்வு.  வான சாஸ்திரத்தில் செவ்வாய், சனி, வியாழன் இவை மூன்றும் மிகவும் சக்தி வாய்ந்த கோள்களாகச் சொல்லப்படுகிறது.  காரணம் அவை சூரிய மண்டலத்தின் வெளி வட்டத்தில் 
அமைந்துள்ளன.  அதனால் அவை ஒரே நேர்க்கோட்டில் வரும் போது அவைகளுடைய தாக்கம் பெரிய அளவில் இருக்கும்.  

சந்திரனும், ராகுவும் சேரும் போது அதுவும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.  சந்திரன் குளிர்ச்சியைப் 
பரவ வைக்கும் தன்மை கொண்டதால் 
அதன் தாக்கம் நீரில் பரவும்.  ராகு ஒரு
தொடர்பு கிரகம் என்று சொல்லப்படும்.
அது சந்திரனின் தாக்கத்தை எளிதில் எடுத்துச் செல்லும். அதனால் எளிதில்
பரவும் !

இதன் விளைவாகவே இருமல், தும்மல்,
பெரும்பாலும் உண்டாகின்றது.  இதன்
காரணமாக இந்த வைரஸ் எளிதில் பரவிப் பலரை பாதிக்கிறது.  அதனால்தான் மக்கள் புழங்கும் இடங்களில் இடைவெளி இருக்க வேண்டும் அல்லது ஒருவருக்கொருவர் அருகில் தொடர்பு வைத்துக் கொள்ளக்
கூடாது, வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று கெடுபிடிகள். இந்த 
வைரஸை ஜெயிக்க வேண்டும் என்றால்
நாம் தனிமைப்பட்டு இருக்கத்தான் வேண்டும். மார்ச் 31 முதல் மே 31 வரை
இதைப் பல்லைக் கடித்துக்கொண்டு
பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும், வேறு வழி கிடையாது

கோள்களின் சஞ்சாரப்படி மே 29 அன்று இந்தச் செயின் அறுபடும்.அதற்குள் இந்த வைரசுக்கு கொடுக்கப்படும் மருந்துகள்
நன்கு வேலை செய்து இதன் தாக்கம்
குறையத் தொடங்கும்.



உலகம் முழுவதும் மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டம் மிக மோசமாக இருக்கிறது என முன்பே கணித்து சொன்ன அதிசய சிறுவன் உலகம் முழுவதும் மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டம் மிக மோசமாக இருக்கிறது என முன்பே கணித்து சொன்ன அதிசய சிறுவன் Reviewed by Rajarajan on 31.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை