அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் தமிழக அரசு
தமிழக அரசின் நூற்பாலைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்த நிலையில் கொரோனா வைரசின் தாக்கத்தின் காரணமாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இளநிலை உதவியாளர்கள் மற்றும் மின் பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 2ம் தேதியன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
அந்த அறிவிப்பின்படி, தூத்துக்குடி பாரதி கூட்டுறவு நூற்பாலை, தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலை, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை உள்ளிட்ட தமிழக அரசிற்கு உட்பட்ட நூற்பாலைகளில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பிக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மேற்கண்ட நூற்பாலைகளில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பங்களைப் பெறுவதற்கும் மற்றும் சமர்ப்பிப்பதற்குமான கால அவகாசம் 2020 ஏப்ரல் 30ம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் தமிழக அரசு
Reviewed by Rajarajan
on
31.3.20
Rating:
கருத்துகள் இல்லை