கொரோனா தீவிரம் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட மத்திய அரசு அதிரடி உத்தரவு!
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம்ஆனது, இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு மாநிலங்களாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கேரளாவில் மகாராஷ்டிராவிலும் அதிகபடியான நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரித படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாநில அரசுகளை நம்பாமல் மத்திய அரசே களமிறங்கியுள்ளது.
தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டு மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் வணிக வளாகங்கள், நிச்சல் குளங்கள் என அனைத்தையும் 31ம் தேதி வரை மூடி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.
மேலும் பணியாளர்களை அந்தந்த நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணி செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் பொது இடங்களுக்கான போக்குவரத்தினை மக்கள் குறைக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு மனிதனுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் எனவும் இந்த உத்தரவுகள் அனைத்தும் மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தீவிரம் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட மத்திய அரசு அதிரடி உத்தரவு!
Reviewed by Rajarajan
on
16.3.20
Rating:
கருத்துகள் இல்லை