அரசு ஊழியர்களுக்கு 75 % சம்பள குறைப்பை அதிரடியாக அறிவித்தது தெலங்கானா அரசு!!!
தெலங்கானாவில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பள குறைப்பை அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தெலங்கானாவில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் அம்மாநில முதல்வர் சந்தரசேகரராவ் தலைமையில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தியது.
இந்த கூட்டத்தின் முடிவில் தெலங்கானா அரசில் அமைச்சரவை, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரின் சம்பளத்தில் 75%குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் பிற சேவை அதிகாரிகளுக்கு 60% சம்பள குறைப்பு என்று தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. மற்ற பிரிவு ஊழியர்களுக்கு 50% சம்பள குறைப்பும் 4ம் வகுப்பு அவுட் சோர்சிங் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 10% சம்பள குறைப்பும் இருக்கும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 75 % சம்பள குறைப்பை அதிரடியாக அறிவித்தது தெலங்கானா அரசு!!!
Reviewed by Rajarajan
on
31.3.20
Rating:
கருத்துகள் இல்லை