தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Was
புதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்தார். ஆலோசனைக்கு பின் முதல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம்; புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்படுவது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், தமிழக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழகத்தில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும், பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள, பிரதமரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Reviewed by Rajarajan
on
3.8.20
Rating:
கருத்துகள் இல்லை