இந்த ஆண்டு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத இறுதி வாய்ப்பு
இந்த ஆண்டு மேல்நிலைத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் பழைய பாட திட்டத்தில் தேர்வு எழுதுவதற்கு இதுவே இறுதி வாய்ப்பு தேர்வுகள் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு (பழையத் திட்டம்) மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஜீன் 2019ல் உடனடி சிறப்புத் துணைத் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே மாணவர்கள் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத ஜீன் 2019 சிறப்புத் துணைத் தேர்வே இறுதி வாய்ப்பாகும். எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத இறுதி வாய்ப்பு
Reviewed by Rajarajan
on
1.5.19
Rating:
Reviewed by Rajarajan
on
1.5.19
Rating:




கருத்துகள் இல்லை