எட்டாம் வகுப்பு தனித்தேர்வு என்பதற்குப் பதில் பொதுத்தேர்வு என தவறுதலாக சுற்றறிக்கை பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
எட்டாம் வகுப்புக்கு ஏப்ரல் 2ந் தேதி முதல் 9ந் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று கடந்த 3-ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.
8ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கிடையாது என அண்மையில் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இந்த சுற்றறிக்கையால் குழப்பம் நிலவியது. இந்த நிலையில் இதுபற்றி விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, தனித்தேர்வு என்பதற்குப் பதில் பொதுத்தேர்வு என தவறுதலாக குறிப்பிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. பல்வேறு பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால் தனித்தேர்வர்களுக்காக ஆண்டுதோறும் இந்த தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வு என்பதற்குப் பதில் பொதுத்தேர்வு என தவறுதலாக சுற்றறிக்கை பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
Reviewed by Rajarajan
on
7.3.20
Rating:
கருத்துகள் இல்லை