Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மாணவர்கள் பொதுத் தேர்வின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அரசு தேர்வுத்துறை அறிவுரை

Do And Don't In Public Exam 2020 

* மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் அவர்களின் பெயர் தமிழ் மற்றும்       ஆங்கிலத்தில் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது. அதில், பிறந்த தேதி, நிரந்தரப் பதிவெண், 
  பதிவெண், தேர்வு மையத்தின் பெயர், முகவரி, மாணவர் பயின்ற பள்ளியின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
* தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் காண்பித்தால் மட்டுமே, தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
* செல்போன் அல்லது இதர தொலைத்தொடர்பு சாதனங்கள் வளாகத்துக்குள், தேர்வு அறையினுள் எடுத்து வர அனுமதி இல்லை.
* அனைத்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கும் பொதுத்தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் (சொல்வதை எழுதுபவர்கள், மொழிப்பாட சலுகை) உள்ளிட்ட அரசாணையின் 
  விதிகளின்படி வழங்கப்படும்.
* தேர்வில் விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள், கலர் பென்சில்களை பயன்படுத்தக் கூடாது.
* தேர்வர்கள் விடைத்தாள் புத்தகத்தில் உள்ள பக்கங்களை எக்காரணம் கொண்டும் கிழிக்கவும் அல்லது தனியாகப் பிரித்து எடுத்துச் செல்லவும் கூடாது.
* தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், பிற தேர்வரைப் பார்த்து எழுதுதல், விடைத்தாள்களை பரிமாறிக் கொள்ளுதல், ஆள்மாறாட்டம் செய்தல் கூடவே கூடாது.
* தமது விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும், தாமே கோடிட்டு அடித்தல் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடக் கூடாது.
* தேர்வர்கள் அவ்வாறான தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்'.
மாணவர்கள் பொதுத் தேர்வின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அரசு தேர்வுத்துறை அறிவுரை மாணவர்கள் பொதுத் தேர்வின் போது  செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அரசு தேர்வுத்துறை அறிவுரை Reviewed by Rajarajan on 2.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை