C.B.S.E பள்ளிகள் குறித்து, விழிப்புடன் இருக்குமாறு பெற்றோரை கேட்டுக்கொண்ட மத்திய இடை நிலை கல்வி வாரியம்
C.B.S.E பள்ளிகளில் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் முன், C.B.S.E இணையதளத்திற்கு சென்று, உரிய அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாஎன சரிபார்த்துக்கொள்ளுமாறு, , மத்திய இடை நிலை கல்வி வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
2020 - 21 ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்க இருக்கும் சூழலில், பல புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, C.B.S.E பள்ளிகள் குறித்து, விழிப்புடன் இருக்குமாறு பெற்றோரை கேட்டுக்கொண்ட மத்திய இடை நிலை கல்வி வாரியம், அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் குறித்த விவரங்களை, CBSE-இன் www.cbseaff.nic.in மற்றும் www.cbse.nic.in என்ற இணையதளங்கள் மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம் என விளக்கம் அளித்துள்ளது.
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் CBSE நடத்தும் பொதுத்தேர்வை எழுத முடியாது என்று CBSE செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.
C.B.S.E பள்ளிகள் குறித்து, விழிப்புடன் இருக்குமாறு பெற்றோரை கேட்டுக்கொண்ட மத்திய இடை நிலை கல்வி வாரியம்
Reviewed by Rajarajan
on
5.3.20
Rating:
கருத்துகள் இல்லை