பிப்ரவரி 1 பள்ளிகள் திறப்பு, மே 17 பொதுத்தேர்வு
Was
தெலுங்கானாவில் உள்ள பள்ளிகள் பிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் திறக்கப்பட உள்ளன. மேலும் வரவிருக்கும் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.சி) தேர்வுகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு: 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மாநிலத்தில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. நேரடி முறையில் பாடங்களை கற்பிக்க இந்த இரண்டு வகுப்பு மாணவர்களுக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். மேலும் 2020-21 கல்வியாண்டு மே 26 அன்று பள்ளிகளில் நிறைவடையும். தெலுங்கானாவில் உள்ள பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்டது. தெலுங்கானா எஸ்.எஸ்.சி தேர்வுகள் 2021 க்கான முழு அட்டவணை manabadi.co.in இல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் தேதிகளை சரிபார்க்கலாம். தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு மே 2021 இல் இணையதளத்தில் வெளியிடப்படும். தொழிற்கல்வித் தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடத்தப்படும் என்றும் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் உடனடியாகத் தொடங்கும் என்றும் 10 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன் முடிவு பெரும்பாலும் ஜூன் 30, 2021 க்குள் அறிவிக்கப்படும். பள்ளிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை பள்ளிகள் செயல்படும். ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் காலை 8.45 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும். 10 ஆம் வகுப்புக்கான ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், 9 ஆம் வகுப்புக்கு மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறும் என்று சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 1 பள்ளிகள் திறப்பு, மே 17 பொதுத்தேர்வு
Reviewed by Rajarajan
on
25.1.21
Rating:
கருத்துகள் இல்லை