பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்
Was
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:
1.ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். மீதமுள்ள மாணவர்கள் வேறு அறை ஒதுக்கி அவர்களுக்கான பாடங்களை நடத்த ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.
2. மாணவர்கள் பாடங்களை விரைவில் முடிக்க சனிக்கிழமை உட்பட வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
3. பள்ளி வளாகங்களில் கிருமிநாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்களின் நலனில் பள்ளிகள் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
Was
4. தினமும் வெப்ப பரிசோதனை கொண்டு உடல் வெப்பநிலை அறிய வேண்டும். கைகளை சுத்தமாக வைக்க தேவையான சோப்பு மற்றும் சானிடைசர் பள்ளிகள் தங்களது செலவில் வழங்க வேண்டும்.
5. கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்க வேண்டும். மாணவர்களை எந்த தூய்மைப் பணிகளிலும் ஈடுபடுத்தக்கூடாது.
6.ஆசிரியர்கள் வருகைக்கான பயோமெட்ரிக் சாதனத்தை பயன்படுத்தாமல் வேறு வழியில் வருகையை பதிவு செய்ய வேண்டும்.
7. மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சுற்றி திரிய கூடாது. மாணவர்கள் பள்ளிகளில் சமூக இடைவெளியை பயன்படுத்தி உள்ளே வரவும், வெளியே செல்லவும் வேண்டும்.
8. இறைவணக்கம், விளையாட்டு, கலைநிகழ்ச்சி, என்எஸ்எஸ் போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
9.பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நிலை குறித்த தொகுப்பினை பராமரிக்க வேண்டும்.
10. மருத்துவ உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகலாம்.
11. பள்ளி அலுவலகங்கள், கணினி ஆய்வகம் மற்றும் வேதியியல் ஆய்வகங்களில் குளிர்சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது. ஆய்வகங்களில் 2 பேராக ஆய்வுகளில் ஈடுபட வேண்டும்.
12.மாணவர்களின் வகுப்பறைகள் இடைவெளி விட்டு இருக்க வேண்டும். மாணவர்கள் மதிய உணவு பகிர்ந்துகொள்ள கூடாது.
13.பள்ளிகளில் விடுதிகளில் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
கருத்துகள் இல்லை