மலேசியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் முழுமையான பொது முடக்க கட்டுப்பாடு...!
Was
கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, மலாக்கா, ஜோகூர் பாரு, சபா, புத்தரா ஜெயா, லாபுவான் ஆகிய பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் லாக்டவுன் உத்தரவு.
கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மலேசியாவில் நாடு தழுவிய அளவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எனப்படும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அங்கு தொற்றுப் பரவல் வேகமாகக் கட்டுக்குள் வந்தது.
இதையடுத்து அடுத்தடுத்த மாதங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். கடந்த ஆண்டு செம்டம்பர் மாதம் நிலைமை கட்டுக்குள் இருந்தபோது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை சுமார் 9,500ஆக மட்டுமே இருந்தது.
Was
இந்நிலையில் சபா என்ற மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார நடவடிக்கைகளால் பலருக்கும் மீண்டும் வைரஸ் தொற்று பரவியது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அம்மாநிலத்திற்குச் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்தபின் அனைவரும் சொந்த ஊர்களுக்குத் திரும்பியதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் புதிய வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது.
இதனால் மூன்றே மாதங்களில் மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 35 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தினந்தோறும் சராசரியாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 7ஆம் தேதி மலேசியாவில் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் மூவாயிரம் பேருக்கு புதிதாக வைராஸ் தொற்றியது.
இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் "ஒருவர் தனது சுதந்திரத்தை தியாகம் செய்தல், தனித்திருத்தல், சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதை தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் சில உயிர்களைக் காப்பாற்ற முடியும். எனவே அடுத்து வரும் வாரங்களில் பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டியுள்ளது," என பிரதமர் மொகிதின் யாசின் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
கருத்துகள் இல்லை