அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவு 60% சரிவு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் அறிக்கை!!
Was
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட பள்ளிகள் முதல் நாளில் மட்டும் 85% மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல மாணவர்களின் வருகை குறைந்தது. சில மாணவர்கள் சீருடை இல்லாத காரணத்தை கூறியுள்ள நிலையில் அரசு சீருடை கட்டாயமில்லை என்று அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியான காரணத்தால் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் வருகைப்பதிவு 60% முதல் 70% சதவிகிதமாக குறைந்துள்ளது.மேலும் சில சிறிய கிராமங்களில் இன்னும் பேருந்து சேவை இயக்கப்படாததால் பல கிலோமீட்டர் நடந்து பள்ளிக்கு செல்லவேண்டிய நிலைமை உள்ளது. கிராமப்புறங்களில் முழு நேர பேருந்து வசதி கொண்டு வர வேண்டும். சீருடை, வருகைப்பதிவு கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே பள்ளிகளில் ஒழுக்கம் கடைபிடிக்கப்படும்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவு 60% சரிவு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் அறிக்கை!!
Reviewed by Rajarajan
on
27.1.21
Rating:
கருத்துகள் இல்லை