8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தகுதித்தேர்வுகள் – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
Match kvl
2020-2021ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வழங்கும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தகுதி தேர்வு மூலம் வழங்கும் உதவித்தொகை பெறுவதற்கான தேர்விற்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட நிலையில் அதற்கான தேர்வுகள் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஏற்கனவே ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு ஜனவரி 12-ஆம் தேதி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வந்தன. ஆனால் இந்த தேர்வு குறித்து விண்ணப்பிக்க கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி மாணவர்களின் நலன் கருதி ஜனவரி மாதம் 20-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது. தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் இந்த தேர்வுகள் இணையம் வழியாக நடத்த அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 20 ஜனவரி கடைசி நாள் ஆகும்.
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தகுதித்தேர்வுகள் – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
Reviewed by Rajarajan
on
19.1.21
Rating:
கருத்துகள் இல்லை