அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – விரைவில் ஆசிரியர் பணி நியமனம்
Was
தமிழக அரசு ஆண்டுதோறும் பள்ளிகளில் ஏற்படும் ஆசிரியர் காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் தேர்வு செய்யும். அந்த வகையில் 2018-2019 ம் ஆண்டிற்கான காலிப்பணி இடங்களுக்கான முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி சமீபத்தில் தான் முடிந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸின் பரவலினால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகளால் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து உள்ளனர். இதனால் அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் புதிதாக ஐந்து லட்சத்து பதினெட்டாயிரம் மாணவர்கள் சேர்ந்த்துள்ளனர். இதனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான காலிப்பணி இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் 2021-2022 கல்வியாண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பதவிகளுக்கான காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான ஆயத்தப்பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகின்றனது.
இதன்மூலம் வரும் கல்வியாண்டிற்கான காலிப்பணி இடங்களின் உத்தேச எண்ணிக்கையும் கேட்கப்பட்டிருப்பதால், ஆசிரியர்களுக்கான காலிப்பணி இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – விரைவில் ஆசிரியர் பணி நியமனம்
Reviewed by Rajarajan
on
18.1.21
Rating:
கருத்துகள் இல்லை