பொதுத்தேர்வுக்கு தயாராகுவதற்கு எளிதாக இருக்க குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அடங்கிய வினா வங்கி
Was
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகுவதற்கு எளிதாக இருக்க குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அடங்கிய வினா வங்கி தயாரிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு: தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் மாணவர்களின் பொதுத்தேர்வு சுமையை குறைக்க தமிழக அரசு பாடத்திட்டத்தில் 30% பாடங்களை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களில் உள்ள கேள்விகளை எளிதில் படிக்க தமிழக அரசு சார்பில் ‘வினா வங்கி’ வழங்கப்பட உள்ளது. இந்த புத்தகம் மாணவர்கள் வினாக்களை சுலபமாக பயில வழிவகை செய்கிறது. இது தயாரிக்கும் பணியில் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தமிழக பாடநுால் சேவை கழகம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் பொதுத்தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில், குறைந்த பட்ச கற்றல் கையேடும் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும் .
பொதுத்தேர்வுக்கு தயாராகுவதற்கு எளிதாக இருக்க குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அடங்கிய வினா வங்கி
Reviewed by Rajarajan
on
25.1.21
Rating:
கருத்துகள் இல்லை