Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்..குறைவான கட்டணத்தில் அதிவேக இண்டர்நெட் சேவை...

எலான் மஸ்க்
Was
உலக மக்கள் அனைவருக்கும் மிகவும் குறைவான கட்டணத்தில் அதிவேக இண்டர்நெட் சேவையை எவ்விதமான தடையும் இல்லாமல் அளிக்க வேண்டும் என்பது எலான் மஸ்க்-ன் மிகப்பெரிய கனவுத் திட்டம். இந்த மாபெரும் கனவு திட்டத்தின் வெற்றி தான் ஸ்டார்லிங்க். யாருடைய உதவியும் இல்லாமல், எந்த நிறுவனத்துடனும் கூட்டணி வைக்காமல், தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணையுடன் உருவாக்கிய திட்டம் தான் இந்த ஸ்டார்லிங்க். எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் திட்டம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் இருக்கும் வேளையில், தற்போது இந்தச் சேவையை இந்தியாவிற்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளார் எலான் மஸ்க். இந்தியாவில் டெலிகாம் சேவை மூலம் பெரும் அளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் முகேஷ் அம்பானிக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும். எலான் மஸ்க்-ன் இந்தக் கனவு திட்டத்தில் இண்டர்நெட் இணைப்பை செயற்கைக்கோள்-ல் இருந்து நேரடியாக நம் வீட்டிற்கே நேரடியாகப் பெற முடியும். இதனால் எந்த டெலிகாம் நிறுவனத்தையும் நம்பியிருக்கத் தேவையில்லை, இதுமட்டும் அல்லாமல் இந்தச் சேவையைப் பெறுவதும் மிகவும் எளிது. ஒரே ஒரு Antenna வாங்கினால் போது, 24X7 மணிநேரமும் எவ்விதமான தடையும் இல்லாமல் செயற்கைக்கோள்-ல் இருந்து நேரடியாக இண்டர்நெட் சேவையைப் பெறலாம். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ பெரும்பாலான தனது முக்கிய டிஜிட்டல் சேவைகளைப் பிராண்ட்பேன்ட் சேவையை நம்பிதான் வர்த்தகத்தைக் கட்டமைத்து வருகிறது. இந்நிலையில் ஸ்டார்லிங்க்-ன் வருகை ஜியோவிற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்..குறைவான கட்டணத்தில் அதிவேக இண்டர்நெட் சேவை... ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்..குறைவான கட்டணத்தில் அதிவேக இண்டர்நெட் சேவை... Reviewed by Rajarajan on 24.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை