தமிழக பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை கொரோனா அறிகுறி குறித்த பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மாநில சுகாதாரத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், மாநிலம் முழுவதும் திறக்கப்பட்ட அனைத்து பள்ளி வகுப்பறைகளிலும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். வாரம் ஒருமுறை அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதேனும் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் அறிகுறி தென்படும் மாணவர், ஆசிரியர்களுக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
விட்டமின், ஜிங்க் மாத்திரைகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி நடமாடும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
கருத்துகள் இல்லை