Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் பள்ளிகள் திறந்த 5 நாளில் 6 பேருக்கு கொரோனா

School students with Mask
Was
பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட கடந்த 5 நாட்களில் மட்டும் 6 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர், மாணவர், திண்டுக்கலில் ஒரு ஆசிரியர் மற்றும் சென்னையில் 3 ஆசிரியர்கள் என 6 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பள்ளிகள் மூடப்பட்டு சுகாதார பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. மேலும் தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். எனவே பள்ளிகளில் சுழற்சி முறை வகுப்புகள், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறந்த 5 நாளில் 6 பேருக்கு கொரோனா தமிழகத்தில் பள்ளிகள் திறந்த 5 நாளில் 6 பேருக்கு கொரோனா Reviewed by Rajarajan on 25.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை