பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு... பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்த முடியுமா...?
Was
தமிழகத்திலும் கடந்த ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கின. மாணவர்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளி மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் சேலம், திண்டுக்கல், திருப்பூர் என தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள் பயிலும் பள்ளிகள் மட்டும் மூடப்பட்டு உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பிப்ரவரி மாதம் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் அவர்கள் வரும் ஜனவரி 28ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதன் முடிவில் பள்ளிகளை மூடலாமா? அல்லது தொடர்ந்து செயல்படலாமா? என முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு... பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்த முடியுமா...?
Reviewed by Rajarajan
on
27.1.21
Rating:
கருத்துகள் இல்லை