10 & 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் தயாரிக்க தேர்வு துறை அறிவிப்பு
Was
அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்கள், “10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், ஜாதி, மதம், மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், மாற்றுத்திறனாளி வகை, மொபைல் போன் எண், பாட தொகுப்பு, பயிற்று மொழி மற்றும் மாணவரின் முகவரி என, 12 வகையான தகவல்கள் அடங்கிய தொகுப்பினை தயாரிக்க வேண்டும். இந்த விவரங்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து மாவட்ட தலைமை ஆசிரியர்களும், கல்வி மேலாண்மை இணையதளமான ‘எமிஸ்’ இணையத்தளத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்ட username மற்றும் password கொண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாணவர்களின் செல்போன் எண் அளிப்பது கட்டாயமாகும். அதில் தான் தேர்வுகள் குறித்த விவரங்கள் அளிக்கப்படும். அரசு தேர்வு துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும்.
10 & 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் தயாரிக்க தேர்வு துறை அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
28.1.21
Rating:
கருத்துகள் இல்லை