தேர்வு பணியில் ஈடுபடுபவர்கள் செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை
பொதுத் தேர்வு மையங்களில் தேர்வு பணியில் ஈடுபடுவார்கள் செல்போனை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 2-ஆம் தேதி முதல் பிளஸ் 2 பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டுள்ளது. தற்சமயம் தேர்வு பணியில் ஈடுபடக் கூடிய ஆசிரியர்களை பட்டியலை தயாரித்து வெளியிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இப்பணியில் ஈடுபட கூடிய ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தேர்வு துவங்கிய பின்னர் பள்ளி வளாகத்தினுள் செல்போன் பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது மேலும் தேர்வு நடைபெறும் சமயங்களில் மொபைல் போன் அல்லது செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது தேவைப்படும் பட்சத்தில் மையை கண்காணிப்பாளர்கள் மட்டும் லேண்ட்லைன் தொலைபேசி வசதியை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
தேர்வு பணியில் ஈடுபடுபவர்கள் செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை
Reviewed by Rajarajan
on
2.3.20
Rating:
கருத்துகள் இல்லை