Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.03.20





திருக்குறள்

அதிகாரம்:கல்லாமை

திருக்குறள்:405

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

விளக்கம்:

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

பழமொழி

Do good to those who harm you.

பகைவனையும் நேசித்து பார்.

இரண்டொழுக்க பண்புகள்

1. வெற்றி என்பது தற்காலிகம் எனவே எனது வெற்றியில் பெருமை கொள்ள மாட்டேன்.

2. தோல்வி எனக்கு பாடம் எனவே அதிலிருந்து நான் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

எண்ணங்களே செயலாகிறது, என்ற சிறந்த கருத்து உடையவர் நல்லதை மட்டுமே எண்ணுவர்.

_____ விவேகானந்தர்

பொது அறிவு

1. பூச்சி உண்ணும் தாவரங்கள் எந்த சத்தை பெறுவதற்காக பூச்சி உண்கின்றன?

நைட்ரஜன்

2. பச்சையமில்லாத தாவர குடும்பம் எது?

காளான் 🍄

English words & meanings

Pain - an unpleasant feeling due to hurt or wound in the body. வலி

Pane - a piece of glass in a window. ஜன்னலில் போடப்படும் கண்ணாடி பகுதி

ஆரோக்ய வாழ்வு

அஜீரணக் கோளாறுகளால் குடலில் சுவர்கள் புண்ணாகிவிடும் .இதற்கு உலர் திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் அருந்தி வந்தால் குடல் புண்கள் சரியாகிவிடும்.

Some important  abbreviations for students

CAT - Computer adaptive testing

CBT - Computer based teaching

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

சிங்கத்தை ஏமாற்றிய முயல்

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அது அங்கிருந்த பிராணிகளை தன் உணவுக்காக தொடர்ந்து வேட்டையாடியது. இதனால் காட்டில் உள்ள பிராணிகள் பயத்துடனேயே வாழ்ந்து வந்தன. நாளுக்கு நாள் சிங்கத்தின் தொல்லை அதிகரித்தது. அதனால் எல்லாப் பிராணிகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தன.

சிங்கத்திடம் சென்று, நீங்கள் சாப்பிடவதற்காக எங்களில் ஒருவர் ஒவ்வொரு நாளும் உங்கள் இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். இனிமேல் வேட்டையாடுவதற்கு வெளியில் வரவேண்டிய அவசியம் இல்லை என்றது. அதற்கு சிங்கமும் சரி என்றது.

முயல் செல்ல வேண்டிய முறை வந்தது. நண்பர்களே! எனக்கு சற்று அவகாசம் தாருங்கள். எனது தந்திரத்தால் நீங்களும் சிங்கத்தின் அநியாயத்திலிருந்து தப்ப வழி பிறக்கும். வருங்கால சந்ததிகள் காட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்றது.

பிறகு முயல்; தாமதமாகச் சிங்கம் இருக்கும்; இடத்திற்கு சென்றது. சிங்கம் முயலை நோக்கி அட அறிவு கெட்டவனே ஏன் இவ்வளவு தாமதம்? என்று கேட்டது. முயல், அரசே நான் வரும் வழியில் என்னை இன்னொரு சிங்கம்; தாக்க வந்தது. அதனிடம் இருந்து நான் தப்பித்து வர தாமதமாகி விட்டது என்றது.

என்னைப்போல் ஒருவனா? இந்த காட்டிற்கு நான் மட்டும் தான் ராஜாவாக இருக்க வேண்டும். முதலில் அவனை அழித்தால் தான் நமக்கு தினமும் சரியாக உணவு கிடைக்கும் என்று சிங்கம் நினைத்தது. அதனால் புதிதாக காட்டுக்குள் வந்திருப்பவனை கொல்ல நினைத்து முயலிடம் அவன் இருக்கும் இடத்தைக் காட்டு, முதலில் அவனைக் கொன்றுவிட்டுப் பிறகு உன்னை சாப்பிடுகிறேன் என்றது.

முயல் தந்திரமாக சிங்கத்தை தூரத்தில் தெரியும் கிணற்றுக்கு அழைத்துச் சென்றது. இந்த கிணற்றில் தான் அந்த சிங்கம் பதுங்கியிருக்கிறது என்றது. சிங்கம் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தது. அதில் சிங்கத்தின் முகம் தெரிந்தது. அது தன்னுடைய முகம் தான் என்று அறியாத சிங்கம் தன்னுடைய எதிரி என்று நினைத்து அவனை அழிக்க நினைத்து கிணற்றுக்குள் குதித்தது.

சிங்கம் கிணற்றுக்குள் விழுந்த பின் முயல் மற்றப் பிராணிகளை நோக்கி சந்தோஷத்தால் துள்ளிக் குதித்து ஓடியது. சிங்கம் இறந்து போனது.

மற்றப் பிராணிகளிடம் சென்று நம்முடைய எதிரி அழிந்து விட்டான் என்று சந்தோசத்தில் கத்திச் சொன்னது. முயலின் இச்செய்தியைக் கேட்ட பிராணிகள் அனைத்தும் ஒன்று கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. காட்டு மிருகங்கள் அனைத்தும் முயலுக்கு மரியாதை செய்தன. அனைத்து மிருகங்களும் நிம்மதியாக வாழ்ந்தன.

நீதி :
கோபத்தில் எடுக்கும் முடிவு சரியாக இருக்காது.

இன்றைய செய்திகள்

13.03.20

◆இளம் விஞ்ஞானி திட்டத்துக்கு தற்காலிகமாக தேர்ச்சி பெற்ற 368 பள்ளி மாணவ, மாணவிகளின் பட்டியலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

◆தேனி மாவட்டத்தில் காட்டுத் தீயால் வன விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

◆தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்திவைப்பு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு.

◆இந்தியாவில் சுற்றுலா விசாக்கள் வழங்குவது ஏப்ரல் 15 வரை தற்காலிக நிறுத்தம்: கரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு.

◆உலகம் முழுவதும் உள்ள அனைத்து ட்விட்டர் ஊழியர்களும் இனி வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்று அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

◆இந்திய ஈட்டி எறிதல் வீரா் சிவபால் சிங் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.

◆புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, அமெரிக்க வீராங்கனை ஷாங்கை 21-14, 21-17 என்ற நோ் செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.

Today's Headlines

🌸For the Young Scientist Program ISRO released 368 students name list on a temporary basis.

🌸 Due to the forest fire in Theni the wild animals are migrating to another place.

🌸 In Tamil Nadu the NPR census has been stopped declared Minister RP Udayakumar.

🌸 The tourist visa issuing is stopped in India till April 15th in order to control the spread of Corona Virus.

🌸  The employees working in the twitter around the world had to work from the home only orderd the organisation.

🌸 Indian Javelin through player Sivapal Singh got selected for the Olympic for the first time.

🌸 In the famous All England Badminton match for women singles Indian Player P. V. Sindhu won the match against the American player Shong in the set of 21-14 & 21- 17.

Prepared by
Covai women ICT_போதிமரம்
School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.03.20 School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.03.20 Reviewed by Rajarajan on 12.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை