மே 1, 2-ம் தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை
கொரோனவை கட்டுப்படுத்த வருகிற மே 1 மற்றும் 2ஆம் தேதி முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் வென்டிலேட்டர் ஆகியவற்றின்ன் கையிருப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. அந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசுகள் விளக்கம் அளித்தன. அப்போது அவர்கள் அளித்த விளக்கத்தை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், கொரோனாவை முழுமையாக விரட்டியடிப்பதற்கு அனைவரும் இணைந்துதான் பாடுபட வேண்டும். அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும்தான் இந்த கொரோனா பரவலுக்கு காரணம் என்று தெரிவித்தனர்.
நீதிபதிகள் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில், கொரோனா முழு ஊரடங்கு நேற்று அமலில் இருந்த நிலையில் மக்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்ததால் அது முழுமையான ஊரடங்காக அமைந்தது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதியன்றும் அதற்கு முதல்நாள் மே 1ஆம் தேதியும் அரசு விடுமுறையாக இருப்பதால் அன்றைய தினமும் முழு ஊரடங்கை அமல்படுத்த புதுச்சேரி மற்றும் தமிழக அரசுகள் ஆலோசிக்க வேண்டுமென்று பரிந்துரை வழக்கினர்.
கருத்துகள் இல்லை