அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் இருப்பு, வெண்டிலேட்டர் வசதி, ஐசியு வசதி, படுக்கைகள் உள்ளிட்ட தகவல்கள்
தமிழக மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள், ஆச்சிஜன் அளவு குறித்த விவரங்களை பட்டியலிட்டு மாநில அரசு வெளியிட்டுள்ளது.
பல மாநிலங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனத்திடம், முடிந்த அளவு விரைந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி, ஆக்சிஜன் அளவு இருப்பு குறித்த விவரங்கள் மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் எந்தெந்த மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கையிருப்பு, வென்டிலேட்டர் வசதி உள்ளதோ அந்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழக அரசு இந்த தகவல்களை www.stopcorona.tn.gov.in/beds.php என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் இருப்பு, வெண்டிலேட்டர் வசதி, ஐசியு வசதி, படுக்கைகள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த விவரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அப்டேட் செய்யப்படுகிறது என மாநில அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை