தமிழகத்தில் 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு – பள்ளிக் கல்வித்துறை முடிவு!!
தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் திறனை அறிந்து கொள்ள திறனறிவு தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திறனறிவு தேர்வு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் நோயை கட்டுப்படுத்த பல புதிய நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக முதற்கட்டமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக கல்வி துறை
மேலும் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் இல்லாத போதிலும் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் எவ்வாறு கற்றல் திறன் பெறுகிறார்கள் என்பதை அறிய 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஏற்கனவே கொரோனா காரணமாக பாடத்திட்டங்களை முடிக்க முடியாமலும், அவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடியாத காரணத்தினால் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பொதுத்தேர்வுகள் இல்லாவிட்டாலும் மாணவர்கள் கற்றல் திறன் குறித்து அறிந்து கொள்ள இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை