ICSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி!!
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி கல்வி வாரியங்கள் பொதுத்தேர்வுகளை தள்ளி வைத்தும், ரத்து செய்தும் வருகின்றது. அந்த வகையில் CISCE கல்வி வாரியம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ஜூன் முதல் வாரம் தள்ளிவைப்பதாக அறிவித்தது. தற்போது அந்த உத்தரவை வாபஸ் பெற்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை முற்றிலும் ரத்து செய்தும், 12ம் வகுப்பு தேர்வை தள்ளி வைத்தும் அறிவித்துள்ளது. மேலும், 12ம் வகுப்பு தேர்வுகள் நேரடி முறையில் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஐசிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் முன்னதாக மே 5ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. CISCE வாரியத்தின் தலைமை நிர்வாகியும் செயலாளருமான ஜெர்ரி அராத்தூன் அவர்கள், கல்வி வாரியத்தில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஐ.எஸ்.சி 2023 பாடத்திட்டத்திதின் படி நடத்துவதற்கு அட்டவணையை தயாரிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நியாயமான முறையிலும், பக்கச்சார்பற்ற அளவுகோலை அடிப்படையாக வைத்தும் அறிவிக்கப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்து ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி வாரிய பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
ICSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி!!
Reviewed by Rajarajan
on
20.4.21
Rating:
கருத்துகள் இல்லை