Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி படி 32% உயர்வு ஆக இருக்கும் என அறிவிப்பு





நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி வருகின்ற 2021 ஜூலை மாதம் முதல் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அகவிலைப்படி உயர்வு 32% அல்லது 28% ஆக இருக்குமா? என்பது குறித்து நிபுணர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.


அகவிலைப்படி உயர்வு:

கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. பொதுமுடக்கத்தால் வரிவசூல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அரசுக்கு வருவாய் குறைந்து நிதிப்பற்றாக்குறை உருவானது. இதனால் அரசு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பெரும் சிக்கல் நிலவியது. எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படியினை 2020 ஜனவரி முதல் நிறுத்தி வைத்தது.ll000

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளாகினர். அகவிலைப்படி ஜூலை 2021 முதல் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. எனவே அகவிலைப்படி மீண்டும் வழங்கப்படும் பொழுது 32% அல்லது 28% ஆக வழங்கப்படலாம் என இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இது தொடர்பாக நிபுணர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 17 சதவீத அகவிலைப்படி அமலில் இருந்தது.




இது ஜூலை 2021 முதல் மீண்டும் வழங்கப்படும் பொழுது 28 சதவீதமாக (17+3+4+4) ஆக உயரும் என கூறப்படுகிறது. ஆனால் மறுபுறம் 32% அகவிலைப்படி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதாவது ஜூன் 2021 க்குள் DA மேலும் 3-4% அதிகரிக்கலாம். எனவே ஜூனில் தடை நீக்கப்பட்ட பின்னர் DA 30-32% ஆக உயரலாம் என கூறியுள்ளனர். இவ்வாறு இருவேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பு வந்த பிறகே உண்மைத்தன்மை தெரிய வரும் என அரசு ஊழியர்கள் கூறியுள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி படி 32% உயர்வு ஆக இருக்கும் என அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி படி 32% உயர்வு ஆக இருக்கும் என அறிவிப்பு Reviewed by Rajarajan on 3.4.21 Rating: 5

கருத்துகள் இல்லை