Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

CBSE Exam - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு





கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவி்ப்பு!

இன்று மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎஸ்இ10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து எனவும், 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கபப்ட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மே 4-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறும் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல மே 4-ம் தேதி முதல் தொடங்கவிருந்த சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கான சூழல் குறித்து ஜூன் 1-ல் ஆய்வு நடத்திய பின்னர் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்க வேண்டுமென ஏற்கனவே டெல்லி, மத்திய பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலம் வலியுறுத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

CBSE Exam - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு CBSE Exam - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு Reviewed by Rajarajan on 14.4.21 Rating: 5

கருத்துகள் இல்லை