Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகம் முழுவதும் நாளைய மறுநாள் முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுபாடுகள்





ஞாயிற்றுக் கிழமை முழு நேர ஊரடங்கை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.


கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தபடவுள்ளது. அதுபோலவே, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.


ஞாயிற்றுக் கிழமை இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 முதல் 3 மணி வரையிலும், மாலை 6 முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.



தமிழகம் முழுவதும் நாளைய மறுநாள் முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுபாடுகள் தமிழகம் முழுவதும் நாளைய மறுநாள் முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுபாடுகள்  Reviewed by Rajarajan on 18.4.21 Rating: 5

கருத்துகள் இல்லை