பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக கல்வி துறை
கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பரவ தொடங்கியதன் காரணமாக 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் வழக்கம் போல் செயல்பட்டு வந்தன. சில மாவட்டங்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி வகுப்பறைகளில் 50 சதவிகித இருக்கைகளுடன் மாணவர்கள் அமர வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு இடையே சமூக இடைவெளிஇடைவெளியை பின்பற்றும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பள்ளியில் இருக்கும் நேரம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும், சளி & காய்ச்சல் அறிகுறிகள் உள்ள மாணவர்கள் பள்ளிக்குள் வர அனுமதிக்கப்பட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை