மே 17 முதல் ஆன்லைனில் அரியர் தேர்வுகள் – தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதில் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களும் தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையில் இந்த புகார் குறித்த அறிக்கையை தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அரசு தரப்பில் தற்போது தான் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. எனவே அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் கொரோனா காலத்தில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே தேர்வுகளை 8 வாரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வுகள் மே மாதம் 17 ஆம் தேதி முதல் நடைபெறும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையை ஜூலை மாதம் 2வது வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ள நிலையில், இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை