Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கொரோனா அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

 





கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமான அளவில் பரவி வருவதை முன்னிட்டு மாணவர்களின் நலன் கருதி தற்போது டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை விடுமுறை என்று முதல்வர் அறிவித்துள்ளார்.


இந்தியாவில் கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா நோய்த்தொற்றின் பரவல் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை அமல்படுத்தி வருகின்றனர். மேலும் சில மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா நோய் பரவல் காரணமாக விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது டெல்லியில் மிக அதிகமான பள்ளிகளுக்கு விடுமுறை கொரோனா பரவல் காணப்படுகிறது.


தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..?




தற்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி டெல்லியில் கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வருவதால் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை விடுமுறை என்று தெரிவித்தார்.



கொரோனா அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!! கொரோனா அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!! Reviewed by Rajarajan on 9.4.21 Rating: 5

கருத்துகள் இல்லை