12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்த ஆசிரியர் கழகம் கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு மே மாதம் 3ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் காரணமாக தேதிகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டு மே மாதம் 5 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் கடந்த ஆண்டு வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 3.15 மணி நேரம் நடைபெற்றது. ஆனால் அப்போது 100 மதிப்பெண்ணுக்கு மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தற்போது 90/70 மதிபெண்களுக்கு 3.15 மணி நேரம் அதிகமாக உள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர்.
எனவே மாணவர்களின் மனநிலை கருத்தில் கொண்டு 2.45 மணி நேரமாக குறைக்க வேண்டும். மேலும் தற்போது கொரோனா காரணமாக கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுவது போல பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்த ஆசிரியர் கழகம் கோரிக்கை
Reviewed by Rajarajan
on
13.4.21
Rating:
கருத்துகள் இல்லை