10, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யுங்கள் பிரியங்கா காந்தி கடிதம்
நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால்,. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும் எனக் கோரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு மனுக்கள் மூலம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதத்தில், கரோனா வைரஸ் 2-வது அலையில் தேர்வு மையங்களில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது கடினம்.
மாணவர்களை கட்டாயப்படுத்தி தேர்வு எழுத வைத்தால், மாணவர்கள் கரோனா பாதிப்புக்கு ஆளாகி, தேர்வு மையம் கரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறினால், மத்திய அரசும், சிபிஎஸ்இ வாரியமும் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்கள் தீவிரமான பாதிப்புக்கு ஆளாகினால், சட்டப்படி அதற்கு மத்திய அரசும், சிபிஎஸ்இ வாரியமும் பொறுப்பேற்கத் தயாராக இருக்கிறதா.? ஆதலால் 10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என எழுதியுள்ளார்.
.
கருத்துகள் இல்லை